www.supremeholisticinstitute.com
உள்ளம் பெரும் கோ இல், ஊனுடம்பே ஆலயம். பெரும் கோ என்றால் பெரிய பிரானாகிய சிவன். அவர் வசிக்கும் வீடு நம் உள்ளமாகும். அதாவது ஊனுடம்பாகிய ஆலயத்தின் கருவறை நம் உள்ளம். மனிதனின் உள்ளம் என்பது எது ? உள்ளத்தை அறிவது எப்படி ? கள்ளப் புலன்கள் ஐந்தின் ஆற்றலையும் குவித்து, ஒடுக்கி அதன் மூலம் மனதின் விருத்திகளை நிரோதம் செய்து ஒரு நினைவில் நிற்கும் பொழுது உள்ளமும், உள்ளத்தின் "கண்" ஆன்ம ஒளியும் புலப்படும். உயிர் சக்தி எங்கிருந்து எழுகிறதோ, எங்கே போய் அடங்குகிறதோ அதுவே உள்ளம். உள்ளம் என்றால் என்னவென்று தற்கால அறிவியல் சொல்வதென்னவெனில், மூளையே உள்ளத்துடன் இறுகிய தொடர்புடைய உறுப்பு. மூளையின் தொழிற்பாட்டின் விளைவே உள்ளம் அல்லது உள்ளுணர்வு என்பதாகும்.
அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை போன்ற நேரடியாக பொருள்களால் பிரதிநிதிப்படுத்தப்படாத கூறுகளாலானது உள்ளம் என்பதால் நம் முன்னோர்கள் உள்ளத்தை மனம் என்றும் சிந்தை என்றும் கூறினார்கள். கவனித்துப் பார்த்தால் உள்ளம் உள்ளுணர்வேயாகும். அதாவது உள்ளுணர்வு என்பது அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை ஆகியவற்றின் கூட்டாகவே வெளிப்படுகிறது. அப்படியானால் இந்த உள்ளுணர்வு எங்கிருந்து எழுகிறது ? அது நம் ஆழ்மனம் எனப்படும் சித்தத்திலிருந்தே எழுகிறது. அங்கிருந்துதான் உயிர்ப்பு எழுகிறது. அங்கு போய்தான் உயிர்ப்பு அடங்குகிறது. எனவேதான் அறிவே கடவுள் என்றார்கள் நம் முன்னோர்கள். அறிவே கடவுள் என்று தத்துவ மேதைகள் சொல்வதற்கு முன் நம் முன்னோர்கள் சொல்லி விட்டார்கள். ''ஏஷ ப்ரஜாபதிர் யத்ஹ்ருதயம்; ஏதத் ப்ரஹ்மம்; ஏதத் ஸர்வம்;'' என்பது வேத வாக்கு.
இதையே தமிழ் மறை
''புறப்பட்டுப் போகும் புகுதுமென் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி
அறப்பட்டம் அற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றினேன் 'இங்கி தென்' என்கின் றானே!'' என்கிறது.
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்து கொண்டு, மனிதா இதோ உன் உயிராய், அறிவாய், மனமாய் விளங்கி நடம் புரியும் பொருள் எது என்று உணர்ந்து கொள். அதுவே நீ என்பதையும் அறிவாய் என்று உள்ளுணர்வால் தூண்டுகிறது பரம்பொருள். ஆனால், அறிவை அறிவால் அறியாத நிலையால் உள்ளுணர்வையே உணராமல் அறியாமையில் உழல்கிறான் மனிதன். நிலையான மெய்பொருளை மறந்து நிலையற்ற உடல் மீது பற்று கொண்டு உழல்கிறது மனம். தன்னிலையறியாத வரைதான் அது மனம். தன்னிலையறிந்து விட்டால் அது சிவம். உள்ளே சிவம் உறைகின்ற வரைதான் இது உடல், இல்லையென்றால் இது சவம். சிவம் போனால் சவம். சீவனே சிவன். சிவனே சித்தம். சித்தமே அறிவு. அறிவே கடவுள்.
இந்த உடலின் கண் நித்தியப் பொருளான ஆன்மா தேங்கி நின்றாடாது. பிறகு அது எங்கே போகும் ? அருவி நீர் மேட்டில் தங்காது. என்னதான் அலையடித்தாலும் கப்பல் கடலிலேயே தேங்கி விடுவதில்லை. அது போல நம் ஜீவனும் இந்த வினை உடம்பிலோ, இந்த உலகிலோ தேங்கி நிற்கப் போவதில்லை. இதையெல்லாம் கடந்த அதாவது வினைத்தடைகளையும், சித்தத் திரைகளையும் கடந்த மெய்பொருளான பரம்பொருளைப் போய்ச் சேர்ந்து விடும்.
''திடரிடை நில்லாத நீர்போல, ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல்
அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.''
எது நிலையானது, எது நிலையற்றது என்ற உண்மை உணர்வுக்கு வருவதே தெளிவு. அந்தத் தெளிவு இல்லாத வரை ஓய்வு இல்லை, ஒழிச்சலில்லை. சொல்லுதல் எளிது. ஆனால், அது உணர்வுக்கு வர வேண்டும். ஓதலாம் ஓதலாதம் ஓதிக் கொண்டேயிருக்கலாம், பேசலாம் பேசலாம் சாஸ்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு வர வேண்டும். அதற்கு மனதில் தெளிவு வர வேண்டும். மனதில் தெளிவு வேண்டுமென்றால் முதலில் வாழ்வில் ஒழுக்கம் வேண்டும். தெளிவு இல்லாதவர் நிலை இரகதி. தெளிவு பெற்றவர் அடைவார் பரகதி. இரகதி என்றால் இருள் வழி. பரம் எனும் இறை அருள் இல்லாதவர் நிலை இருளே. அதுவே அஞ்ஞானம். பரமாகிய ஆன்மாவின் அருளாகிய ஒளி பட்டுவிட்டால், அத்தகைய அறிவே ஞானம் எனப்படுகிறது. அதாவது அஞ்ஞானம் எனும் இருள் விலகி அறிவு தன் யதார்த்த நிலையை அடைகிறது. இதுவே ஞானம். எனவேதான் சொன்னார்கள் அறிவே கடவுள் என்று.
ஞானம் அடைய முதலில் அறிவு தெளிவை அடைய வேண்டும். தெளிவை அடைய என்னதான் செய்வது ?
''கூடகில் லார், குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார், நயம் பேசித் திரிவார்கள்
பாடகில் லார், அவன் செய்த பரிசறிந்து
ஆடகில் லார், அவர் பேறிது வாமே.''
குருவானவர் காட்டிய நெறியில் நில்லாதவர் இறைவனுடன் கூட மாட்டார். இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பார். இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாட மாட்டார். அவ்வாறு பாடி ஆடுபவர் எய்தும் பேறு இப்படி ஆகுமோ ? ஆகாது. அதாவது ஆன்மாக்கள் தாமாகவே பரநாட்டம் கொண்டு இறைவனைக் கூடலாம். தெற்று வேதாந்தம் பேசிக் கொண்டிருக்காமல், ஒரு குருவைப் பணிந்து அவர் காட்டும் வழியில் திருவருளை நாடலாம். இறைவன் புகழை மனமுருகப் பாடிப் புகழ்ந்து அவர் அருளைப் பெற முயலலாம். இறைவனின் கருணையை உணர்ந்து, இப்படித் தன்னை அடைய இத்தனை வழிமுறைகளைப் பரிசாகத் தந்த இறைவனை நினைத்து பாடி ஆடலாம். இதையெல்லாம் செய்யாமல், இறை அருளையே உணராத வினையாளர்களுக்கெல்லாம் இரகதிதானே. தெளிவு அடையாதவர் நிலை இரகதியே.
''தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவமாக மாட்டார்
தெளிவு அறியாதார் தீரார் பிறப்பே.'
SPARK YOGA"Ignite your soul powers for Blissful life"✨💫🕉🔱🦚

No comments:
Post a Comment